ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      இந்தியா
Supreme Court 27-09-2018

புது டெல்லி, இரட்டைஇலை சின்னத்தை இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது. பல்வேறு விசாரணைக்குப் பிறகு 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என்று தீர்ப்பளித்தது. மேலும் தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து