இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கெர்பர்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      விளையாட்டு
Kerber 2019 03 15

Source: provided

கலிபோர்னியா : கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கெர்பர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒற்றையர் பிரிவு

இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி போட்டியில் 8-ம் நிலை வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) - வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் கெர்பர் 7(7)- 6(3), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் கெர்பர் - பென்சிக் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஆன்ட்ரீஸ்கு (கனடா) மோதுகிறார்கள்.

காயம் காரணமாக...

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரயோனிக் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கெக்மனோவிச்சை (செர்பியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) - மோன்பில்ஸ் (பிரான்ஸ்) மோத இருந்தனர். ஆனால் மோன்பில்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் டொமினிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து