முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் இந்திய வம்சாவளி பெண்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை, இந்திய வம்சாவளி பெண்ணான லில்லி சிங் தொகுத்து வழங்கவுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வருபவர் லில்லி சிங். இந்திய வம்சாவளி பெண்ணான இவர் சிறந்த காமெடி நடிகரும், யூ.டியூப் நட்சத்திரமும் ஆவார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீமாக கொண்ட அவர் டொரெண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு மோனிகர் சூப்பர் உமென் எனும் யூ.டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். இந்த சேனலை 14 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.எஸ். தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் ஒரு உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.  இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் இந்த உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது இதுவே முதன்முறையாகும்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில் லில்லி கடந்த 2017-ம் ஆண்டிற்கான விருப்பமான யூ.டியூப் நட்சத்திரம் எனும் புகழ்பெற்ற பீப்பிள் சாய்ஸ் விருதினை பெற்றுள்ளார். மேலும் இவர், ஐஸ் ஏஜ்:கொலீசன் கோர்ஸ் மற்றும் பேட் மோம்ஸ் எனும் திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து