முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் மொத்தம் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயக்கம் காட்டுவதால் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
  
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு மே மாதம் 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் முதலில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு வேட்பாளர்கள் பெயரையும் வெளியிட்டார். இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் நிச்சயமாக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற இயலாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உணர்ந்தார். எனவே தனித்து போட்டியிட அவருக்கு தயக்கம் ஏற்பட்டது.

மீண்டும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று ஆலோசித்து வருகிறார். இதற்காக அவர் சக்தி செயலி மூலம் டெல்லியில் உள்ள சுமார் 52 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லது என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மி தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து