முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் ராகுல் போட்டியிட சித்தராமையா விருப்பம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : நாட்டின் அடுத்த பிரதமரான ராகுல் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல், கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என சித்தராமைய்யா, ராகுலுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய தலைவர்களை கர்நாடகா எப்போதும் ஆதரித்துள்ளது. 1978-ல் இந்திரா சிக்மகளூர் தொகுதியிலும், 1999-ல் சோனியா பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு, தங்களின் பலத்தை நிரூபித்துள்ளனர்.

நமது அடுத்த பிரதமரான ராகுலும் கர்நாடகாவின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ராகுல் பரிசீலிக்க வேண்டும். தென்னிந்தியாவில் எங்களின் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். அதற்காக அவர் கர்நாடகாவை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து