முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் பெய்த கன மழைக்கு 42 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பப்புவா : இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பப்புவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேய் மழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து