முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 51 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் ராணுவ படைகள் நடத்திய 24 மணி நேர தாக்குதலில் 51 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து அந்த நாட்டின் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் அவர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் படைகள் ஈடுபட்டன. நேற்று முன்தினம் வரையிலான 24 மணி நேரத்தில் ராணுவத்தின் இந்த நடவடிக்கையில் அங்கு 51 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது. ஆனால் இது பற்றி தலிபான் பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கார் டிரைவர் என கூறப்படுகிறது. உரிய நேரத்துக்கு முன்னதாகவே இந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து