முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது - தமிழகத்தில் நாளை மனுத்தாக்கல் ஆரம்பம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கடந்த 10-ம் தேதி வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை இந்தத் தேர்தல் நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் உள்ள 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம்தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு நடக்கிறது.

4-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும், 5-ம் கட்ட தேர்தல் மே 6-ம் தேதி 7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கும் நடக்கிறது. 6-வது கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. 7-வது கட்ட தேர்தல் மே மாதம் 19-ம் தேதி நடக்கிறது. 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவுடன் பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவின் போது ஒரே கட்டமாக ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகள், அருணாசல பிரதேசத்தில் இருக்கும் 60 தொகுதிகள், சிக்கிம் மாநிலத்தில் 32 தொகுதிகள், ஒடிசாவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகள் ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

முதல்கட்ட தேர்தலின் போது ஆந்திரா - 25, அருணாசல பிரதேசம் - 2, பீகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு, காஷ்மீர் - 2, மகராஷ்டிரா -7, மணிப்பூர் -1, மேகாலயா -2, மிசோரம் -1, நாகலாந்து -1, ஒடிசா -4, சிக்கிம் -1, தெலுங்கானா -17, திரிபுரா -1, உத்தர பிரதேசம் -8, உத்ரகாண்ட்-5, மேற்கு வங்காளம் -2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் -1, லட்சத்தீவுகள் -1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 11-ம்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 25-ம் தேதியாகும்.
தமிழகத்தில் நாளை

தமிழகத்தில் நாளை வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 26-ம் தேதியாகும். மனுக்கள் பரிசீலனை 27-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29-ம் தேதியாகும். வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து