முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடி மனைவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது மும்பை சிறப்பு கோர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : வைர வியாபாரி நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர்.

வைர வியாபாரி நீரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் நீரவ் மோடி மோசடி செய்த பணத்தில் அவரது மனைவி ஆமி மோடி நியூயார்க்கில் உள்ள சென்டரல் பார்க் பகுதியில் சொத்து வாங்கி இருப்பது அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து