முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க. வேட்பாளர் முதல் பட்டியல்: தினகரன் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் நேற்று வெளியிட்டார்.

இதில் 24 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்:

1. திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா, 2. தென் சென்னை - டாக்டர். இசக்கி சுப்பையா, 3. ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன், 4. காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி, 5. விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி, 6. சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம், 7. நாமக்கல் - சாமிநாதன், 8. ஈரோடு - செந்தில்குமார், 9. திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம், 10. நீலகிரி (தனி) - ராமசாமி, 11. கோவை - அப்பாதுரை, 12. பொள்ளாச்சி - முத்துக்குமார், 13. கரூர் - தங்கவேல், 14. திருச்சி - சாருபாலா தொண்டைமான், 15. பெரம்பலூர் - ராஜசேகரன், 16. சிதம்பரம் (தனி) - டாக்டர். இளவரசன், 17. மயிலாடுதுறை - செந்தமிழன், 18. நாகை (தனி) - செங்கொடி, 19. தஞ்சாவூர் - முருகேசன், 20. சிவகங்கை - தேர்போகி பாண்டி, 21. மதுரை - டேவிட் அண்ணாதுரை, 22. ராமநாதபுரம் - ஆனந்த், 23. தென்காசி (தனி) - பொன்னுத்தாய், 24. நெல்லை - ஞான அருள்மணி ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை வேட்பாளர்கள்:

சட்டசபை இடைத்தேர்தலில் 1. திருப்போரூர் - கோதண்டபாணி, 2. குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன், 3. ஆம்பூர் - பாலசுப்பிரமணி, 4. அரூர் (தனி) - முருகன், 5. மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி, 6. சாத்தூர் - எதிர்கோட்டை சுப்ரமணியன், 7. பரமக்குடி (தனி) - டாக்டர். முத்தையா, 8. பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை, 9. பெரம்பூர் - வெற்றிவேல் ஆகியோர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து