முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கள்ளக்குறிச்சியில் எல்.கே சுதீஷ் போட்டி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு, கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று  விஜயகாந்த் வெளியிட்டார். இதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதியில் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து