முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவையால் அணியில் இடம் கிடைக்கவில்லை - சொல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

தற்போதைய நாகரிக காலத்தில் அணிக்கு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவைப்படுவதால், நான் வெளியில் இருக்கிறேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு இல்லை...

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் நோ-பால் வீசினார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்படி டி20 அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அஸ்வின் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடவில்லை. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

பஞ்சாப் அணிக்காக...

அதே காலக்கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்தனர். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காவிடிலும் உள்ளூர் தொடர்களில் அஸ்வின் விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.

ரிஸ்ட் ஸ்பின்னர்கள்...

இந்நிலையில் மோசமான வகையில் பந்து வீசுகிறேன் என்பதற்காக என்னை வெளியில் வைக்கவில்லை. தற்போதைய நாகரிக காலத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவை இருப்பதால் வெளியில் இருக்கிறேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘தற்போது வெளியில் இருப்பதை நான் விரும்பவில்லை. ஏனென்றால், நான் அந்த அளவிற்கு மோசமாக செயல்படவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பந்து வீச்சு மோசம் என்று சொல்ல இயலாது. தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது.

விரும்பவில்லை...

தற்போதைய நாகரிக கால கிரிக்கெட்டில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணிக்கு தேவைப்படுகிறார்கள். அதனால் நான் வெளியில் உட்கார்ந்து இருக்கிறேன். நான் விளையாடிய கடைசி ஒருநாள் போடடியில் கூட 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினேன். சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் கூட சிறப்பான வகையில் பந்து வீசினேன். நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வகை கிரிக்கெட்டுக்கான (டெஸ்ட்) ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளராக இருப்பதை விரும்பவில்லை. தற்போதைய கால கிரிக்கெட் சவால் ஆனது. என்னுடைய சிறந்த பந்து வீச்சை எந்த அளவிற்கு வெளிப்படுத்த முடியுமோ, அதைச் செய்வதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து