முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் ஆஸ்திரேலிய எம்.பி.யை முட்டையால் அடித்த சிறுவன்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வெலிங்டன் : நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வலதுசாரி எம்.பி.யை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்து ஆஸ்திரேலிய வலதுசாரி எம்.பி. பிரேசர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, முஸ்லிம்களை நியூஸிலாந்தில் அனுமதித்ததால்தான் கடுமையான சூழலைச் சந்தித்திருக்கிறது என்ற தொனியில் சர்ச்சையான கருத்தைப் பதிவு செய்தார். அவர் இந்தக் கருத்தைச் சொன்னதும் அருகில் இருந்த 17 வயது சிறுவன் கையிலிருந்த முட்டையால் அவர் தலையில் அடித்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத பிரேசர் சிறுவனைத் தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து