முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: விசாரணையை சந்திக்க தயார் என்கிறார் இலங்கை தளபதி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : கடந்த 2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம். அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து