முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூத் அஸார் விவகாரம்: பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்கிறது சீனா

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் சீனா நடந்து கொள்ளும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி, இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதற்கு மத்தியில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதாவது,

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அண்டை நாடாக இருப்பதால், அந்நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைப் போக்க சீனா உறுதிபூண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷியுடனான பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றநிலை குறித்து ஆலோசனை செய்யப்படும். மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் சீனா நடந்துகொள்ளும்.

இந்த விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடனும் தொடர்பில் உள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்க இயலாது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து