முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தலாய்லாமா யார்?: சீன செய்தி தொடர்பாளர் தகவல்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீன அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவரே திபெத் புத்த மதத்தின் அடுத்த தலாய் லாமா என்று மிரட்டல் விடுத்துள்ள சீன அரசு, அடுத்த தலாய் லாமாவாக இந்தியாவை சேர்ந்தவரை பிரகடனம் செய்யும் தலாய் லாமாவின் விருப்பத்தையும் நிராகரித்துள்ளது.

தற்போது 14-வது தலாய் லாமாவாக இருக்கும் டென்சின் கியாட்சோ தலாய்லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராக கருதப்படுகிறார். இந்த சூழ்நிலையில், அடுத்த தலாய்லாமா இந்தியாவில் இருந்து தேர்த்தெடுக்கப்படுவார். சீன பிரதிநிதிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படாது என தலாய்லாமா தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சீன அரசு, அடுத்த தலாய்லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங், திபெத்திய புத்த மதத்தில் மறுபிறப்பு என்பது வேறுபட்டது. அவர்களுக்கென தனித்துவமான சடங்குமுறைகள் உள்ளன. சீன அரசு மத நம்பிக்கைகளில் சுதந்திரம் அளிக்கும் கொள்கை உடையது. அதே சமயம், திபெத்திய புத்த மத மறுபிறப்பு உள்ளிட்ட மத விவகாரங்களில் சீன அரசுக்கென ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. 14-வது தலாய் லாமா கூட மத பாரம்பரியங்களின் அடிப்படையில் சீன அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே. எனவே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் சீன அரசின் விதிகள், ஒழுங்குமுறைகள், மத பாரம்பரியங்களுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து