முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் - பார்லி. தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும் - கழக மகளிரணி சகோதரிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் - பார்லி. தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று மகளிரணி சகோதரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.,

ஒன்றைகோடி தொண்டர்களை கொண்டிருக்கும் இந்த இயக்கத்தின் உயிர்நாடி தாய்மார்கள் தான். பச்சிலையாம் இரட்டை இலை சின்னத்தை பாசத்தோடு நேசிக்கிற தமிழக தாய்மார்களுக்கு அ.தி.மு.க. என்பது ஒரு தாய்மடியாகவே இன்று வரை திகழ்கிறது என்பதை கழகத்தின் அச்சாணியாக திகழும் மகளிரணி சகோதரிகள் அறிவார்கள்.

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பட்டதாரி பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டி, இல்லத்தரசிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி தந்து அவர்களை விஞ்ஞான யுகத்திற்கு அழைத்து வந்து தாய்மார்களின் வேலைப்பளுவை குறைத்ததும் நம் கருணைத்தாய் வழிநடத்திய கழக அரசுதான். பென் அரசு ஊழியர்களுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு வழங்கி பெருமைப் படுத்தியதும் கழகம் தான்.

இப்படி பெண் குலத்தை போற்றுகிற கழகத்தில் லட்சக்கணகான பெண்கள் தங்களை இணைத்துக் கொள்ள இன்று இந்திய அரசியலிலேயே அதிகான பெண்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த இயக்கம் இமலாய பெருமையடைந்து நிற்கிறது. மேலம் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும், மேயர்களையும், கழக அரசின் அதிகாரப் பதவிகளில் உயர்மட்டங்களில் அதிகாரிகளாக பூத்துக் குலுங்குகின்ற பொற்காலம் பெண்ணினத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கழக அரசு பெண்ணித்திற்கு ஆற்றிவரும் பெரும் தொண்டையும் நம் அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளை, முயற்சிகளையும் தமிழக மக்களிடம் அன்போடு எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தனது சபத்தை தான் மடியிட்டு வளர்த்த இயக்கத்தின் தான் பெற்றெடுத்திடா பிள்ளைகள் நிறைவேற்றி காட்டுவார்கள் என்னும் அம்மாவின் நம்பிக்கையை மெய்யாக்கிட 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் கழகம் அமைத்திருக்கும் வெற்றிக் கூட்டணிக்கு  ஒட்டமொத்த தமிழகத்தின் தாயமார்களின் வாக்குகளை எல்லாம் இரட்டை இலை சின்னத்திற்கான நிரந்திர வைப்பு நிதியாக்கிட மகளிரணி சகோதரிகள் அல்லும் பகலுமாய் உழைத்திட வேண்டும்மென்று கேட்டுக்கொள்கிறேன்.

தாய்மார்களின் ஓட்டுக்களை கடுகளவும் குறையாது கொண்டு சேர்த்திட கழக மகளிர் சிப்பாய்படை களப்பணி ஆற்ற வேண்டுமென உங்களது அன்புச் சகோதரனாக அன்புக் கட்டளையிடுகிறேன். கழக அரசை எவராலும் அசைத்து பாக்க முடியாது என்பதனை தோள்தட்டி  சொல்லும் விதத்தில் நடைபெற இருக்கம் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இரட்டை இலையே வாகை சூடிடும் வகையில் கழக மகளிரணி சகோதரிகள் அருந்தொண்டாற்ற வேண்டும்.

ஆளுக்கொரு ஓட்டு நம் அம்மாவுக்கு ஒரு ஓட்டு என்பதையே லட்சியமாகக் கொண்டு ஒன்றரை கோடித் தொண்டர்களின் ஒவ்வொரு ஓட்டோடும் அம்மாவுக்காக ஒரு ஓட்டு என்பதும் ஒன்றாகிவிட மூன்று கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி குவிக்க எனதருமை சகோதரிகளே புறப்படுங்கள். தாய்க் குலத்தை நிமிர வாழவைத்த நம் தங்கத் தாரகையின் கழக அரசுக்கு எங்கள் தங்கைகளே பலம் என்பதை இவ்வுலக்ததிற்கு உணர்த்த உடனே களம் இறங்குங்கள்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து