முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூத் அசார் விவகாரம்: ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிடம் ஜெர்மனி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெர்லின், ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஜெர்மனி நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அதனை தொடர்ந்து இந்த இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தியது.

அதன் படி இந்தியாவுக்கு ஆதரவாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்த தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டைபோட்டது. எனினும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் பக்கபலமாக உள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஜெர்மனி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பில் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ள ஜெர்மனி, ஐரோப்பிய கூட்டமைப்பின் பிற உறுப்பு நாடுகளிடம் இதுபற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 28 நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து