முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் - முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : பங்குனி உத்திர திருவிழா நேற்று பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் குலதெய்வம் மற்றும் முருகன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.  

பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள முருகப் பெருமான் வீற்றிருக்கும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை உள்ளிட்ட அறுபடை வீடுகளில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து