முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் வரும் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பிரச்சாரம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் அ தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.

வட சென்னை...

25-ம் தேதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இடைத்தேர்தல் நடைபெற உள்ள பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.26-ம் தேதி மத்திய சென்னை, தென் சென்னை பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

காஞ்சிபுரத்தில்….

27-ம் தேதி காஞ்சீபுரம், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள், இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூர், பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து