முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது அ.தி.மு.க அரசு மட்டுமே தேனி பாராளுமன்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி பாராளுமன்ற கழக வேட்பாளராக ப.ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆசி பெற்று முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு மேளதாளம் முழங்க கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து  ஜி.கல்லுப்பட்டி ஸ்ரீபட்டாளம்மன் திருக்கோவிலில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக பாராளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா உள்ளிட்டோர்  சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை துவக்கிய கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் ஜி.கல்லுப்பட்டியில் பேசும்போது கழக ஆட்சியில் தான் மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் மக்களின் நலன் கருதி நல்ல பல நலத்திட்டங்கள் கழக ஆட்சியில் தான் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே பொதுமக்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிட, நல்ல பல திட்டங்களை செயல்படுத்திட கழக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்கு கேட்டார்.  இப்பிரச்சாரத்தின்போது கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து