முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சேனல் நிகழ்ச்சிக்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த தாய் கைது

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவில் யூ டியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ் எனும் யூடியூப் சேனலை மச்செல் ஹாக்னி எனும் பெண் உருவாக்கியுள்ளார். இதற்காக 6-15 வயதுடைய, 7 குழந்தைகளை தத்தெடுத்து, குழந்தை நட்சத்திரங்களாக வளர்த்துள்ளார். இந்த யூ டியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த சேனலில் பிரபலமான குழந்தைகள் பங்கு பெறும் குக்கி கேப்ச்சர் மிஷன் மற்றும் சூப்பர் பவர் பேபி பேட்டில் எனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு வசனத்தை மறந்தாலோ, உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காது. சில நேரங்களில் ஐஸ் கட்டியில் குளிக்க சொல்வதும் உண்டு. குழந்தைகளை ஒரு இருட்டு அறையில் அடைத்து 2, 3 நாட்கள் அப்படியே பசியிலும், தாகத்திலும் விட்டு விடுவதும் உண்டு. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட 7 குழந்தைகளும் சில ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை.

இது போன்ற சித்ரவதைகளை தொடர்ந்து, 7 குழந்தைகளில் 6 குழந்தைகள் போலீசாரை நாடியுள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் போலீசார் ஹக்னியின் வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மீட்டு, போலீசார் விசாரணை நடத்த துவக்கினர். இதனையடுத்து போலீசார் ஹக்னி மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர். இந்நிலையில் ஹக்னியின் யூ டியூப் சேனலை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக யூ டியூப் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து