முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசிச பா.ஜ.க அல்ல- பாசமுள்ள பா.ஜ.க- தமிழிசை வர்ணனை

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி, பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.   

தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் தூத்துக்குடி வந்தார். அவருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதி முன்னேற்றம் அடையவேண்டும். இங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது எப்படி என்பது குறித்து விஷன் டாக்குமென்ட் தயார் செய்துள்ளேன்.

இது போன்று யாரும் சிந்தித்திருக்க முடியாது என்ற அளவில் அந்த டாக்குமென்ட் இருக்கும். இதை வருகிற 26-ந்தேதி தூத்துக்குடி வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெளியிடுவார். பிரதமர் மோடியை ஸ்டாலின் சுயநலவாதி என்கிறார். குடும்பத்திற்கு, வாரிசுக்கு என எதையும் செய்யாதவர் மோடி. ஆனால் வாரிசுக்காக பல சலுகைகளை அளிப்பவர் ஸ்டாலின். ராகுல்காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதை அவரது கூட்டணி கட்சிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகிற 25-ந்தேதி எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். அதைத்தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன். விளாத்திகுளம் வேட்பாளர் சின்னப்பன் பிரசாரத்தின் போது வாய் தவறி கனிமொழி பெயரை உச்சரித்தார். இதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.  ஸ்டெர்லைட் பிரச்சனை வழக்கில் உள்ளது. நான் நேர்மாறான அரசியல் செய்யவே விரும்புகிறேன். எதிர்மறையான அரசியல் செய்ய மாட்டேன். மக்கள் எளிதில் அணுக கூடிய சாதாரண பெண்ணாகவே இருப்பேன்.

கருத்து சுதந்திரம் குறித்து கனிமொழி பேசுவது சரியல்ல. பா.ஜனதா ஆட்சியில் கருத்து சுதந்திரம் இருப்பதால் தான் பலர் பேச முடிகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரசுடன் கை கோர்த்து கொண்டு இதுபற்றி பேசக்கூடாது. சாதிக் பாட்சா மனைவி கூடா நட்பு கேடாய் விளையும் என கலைஞர் கூறிய வார்த்தையை வைத்து விளம்பரம் செய்ததற்காக அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

மத்தியில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் ஆட்சி புரிவதால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடிகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை இது பாசிச கட்சி அல்ல. பாசமுள்ள பா.ஜ.க.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து