முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் இன்னிங்ஸ் ஆரம்பம்: பா.ஜ.க.வில் இணைந்தார் கவுதம் காம்பீர்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

ஓய்வு அறிவிப்பு...

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கவுதம் தனது அரசியல் நிலைப்பாட்டை நேற்று டெல்லியில் அறிவித்துள்ளார்.

பா.ஜ.க.வில்....

டெல்லியில் நடைபெற்று அரசியல் இணைவு விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்று கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலை கவுதம் பா.ஜ.க.வில் இணைந்தார். கவுதம் காம்பீருக்கு பா.ஜ.க. துண்டை தோளில் போட்டு இரு அமைச்சர்களும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியை பா.ஜ.க. ஒதுக்கவுள்ளதாகவும், அங்கு கவுதம் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து