முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறுவதை நிறுத்தும்படி மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. புகார் மனு

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை கூறுவதை நிறுத்தும்படி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. புகார் மனு அனுப்பியுள்ளது.

அவதூறு கருத்துகள்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது.,

கடந்த 20-ம் தேதி திருவாரூரிலும், 21-ம் தேதி திருச்சி மாவட்டம் முசிறியிலும் தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை நெரிமுறைகளுக்கு மாறாக மிகவும் அவதூறான கருத்துக்களை மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவருடைய உரையின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

புகழுக்கு களங்கம்...

பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நடத்தை நெரிமுறைகள் தற்போது அமுலில் உள்ளன. தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  ஆனால் மு.க.ஸ்டாலின், அவரது நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரம் மூட்டும் வகையில் அவர் பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சு விஷமத்தனமானது. முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடியது. ஏற்கனவே ஒரு தமிழ் நாளிதழில் அவர் பேட்டி கொடுத்துள்ளார். திண்டுக்கல் கூட்டத்திலும் அவ்வாறு பேசியிருக்கிறார். இதற்காக தமிழக அரசு ஏற்கனவே அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

திட்டமிட்டு...

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும். அவர் பேசும் பேச்சுக்கள் தவறான கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு அவர் செய்கிறார். அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்.

நீதிமன்றம்...

ஏற்கனவே கொடநாடு எஸ்டேட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் முதல்வரை இணைத்து எந்த கருத்துகளை சொல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், மேத்யூ சாமுவேன் சொன்னதையும், மற்றவர்கள் சொன்னதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி அரசியல் ஆதாயத்தோடு பேசி வருகிறார். எனவே மு.க.ஸ்டாலினும் சரி அல்லது எந்த கட்சி உறுப்பினரும் சரி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முறனாக, முதல்வருக்கு எதிராக பேசுவதை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும். இந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் உரைகளை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து