முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை :  ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில்,  சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்து விட்டது. சூலூர் தொகுதி குறித்து விரைவில் அறிக்கை அனுப்புவோம். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிந்துள்ளன. அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ரூ.30 கோடி ரொக்க பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.4.45 கோடி பணம் மற்றும் 94 கிலோ தங்கம் திருப்பி தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து