முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி கோலகல துவக்கம்: துவக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : 12-வது ஐ.பி.எல். போட்டி நேற்று சென்னையில் கோலகலமாக துவங்கியது. தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு அணி 70 ரன்னில் சுருண்டது. சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சு தேர்வு...

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் நேற்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொடக்க நாளான நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பர்திவ் பட்டேலும் களம் இறங்கினர். சுழலில் ஹர்பஜன் சிங் கலக்கினார். தடுமாறிக் கொண்டிருந்த கோலி 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் திருப்பி அனுப்பினார்.

70 ரன்னில்...

தொடர்ந்து மிரட்டிய இவர் அபாயகரமான டிவிலியர்சையம் 9 ரன்னில் அவுட்டாக்கினார். ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 2 ரன்னுக்கு இம்ரான் சுழலில் சிக்கினார். இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து சுருண்டது. சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை அடுத்து 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.ஷான் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு அவுட்டாகி வெளியேற கேதர் ஜாதவ், ஜடேஜா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து