முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீதான சமீபத்திய தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரியா மீது விதித்த சமீபத்திய தடைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வந்ததால் அந்நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்திருந்தது. பன்னாட்டு பொருளாதார தடைகளை மீறி சீனாவிடம் இருந்து நிலக்கரி வாங்கியதால் வடகொரியா மீது கூடுதலான தடைகளை அமெரிக்கா சமீபத்தில் விதித்திருந்தது.

இந்த நிலையில் இந்த தடையை திரும்ப பெற்றுக் கொள்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் மீதான அன்பின் காரணமாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து