முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் முலாயம் பெயர் இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : சமாஜ்வாடி கட்சி நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலில் முலாயம் சிங் பெயர் வெளியிடப்படவில்லை. இதில் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 

உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கட்சியின் நிறுவனரான முலாயம் சிங், மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் உள்ள 50 சதவீத தொகுதிகளை சமாஜ்வாடி கட்சியானது கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுத்துள்ளது வருத்தமளிக்கிறது என தொண்டர்கள் முன் பேசினார்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தனது நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டு உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அக்கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் யாதவின் பெயர் இடம் பெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து