முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமாநிலத்தில் வெற்றி கிடைக்காது என்பதால் தென் மாநிலத்தை குறி வைக்கிறார் ராகுல் காந்தி - பொன். ராதாகிருஷ்ணன் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

நாகர்கோவில் : வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரிய வந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. 

நாளை  ஒட்டு மொத்த பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இலகுவான வெற்றியை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா. அனைத்துக்கும் உள்ளது.

இந்த மண்ணின் மைந்தர்களான மார்சல் நேசமணி, பொன்னப்ப நாடார், சுவாமி தாஸ் என்று எண்ணற்ற தலைவர்கள் இந்த மண்ணில் வெற்றிபெற்றாலும், பெறா விட்டாலும் இதன் உயர்வுக்கும், வளத்திற்கும் உழைத்து உள்ளார்கள். அனைத்து திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்துதான் உள்ளது.

வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரியவந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார். அதனால் தான் அவரது கட்சிக்காரர்கள் ராகுல் தென் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும், பிறகு மாற்றிக் கொள்வதும் இயல்பு. அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல. அடகு என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவது தவறானது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து