முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 3-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது - ராஜஸ்தானை எதிர்கொள்ளும் கிங்ஸ் லெவன்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையை முடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஐ.பி.எல். போட்டியில் இன்று களமிறங்குகிறார். ஸ்மித்தின் வருகையால் அசுரபலம் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஸ்மித் விளையாடவில்லை. ஆனால், வங்கதேசத்தில் நடந்த பி.பி.எல். தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தும், முழங்கை காயத்தால் விலகினார். முழுமையான லீக் தொடரில் ஒரு ஆண்டுக்குப் பின் ஸ்மித் பங்கேற்றும் தொடர் ஐ.பி.எல். போட்டியாகத்தான் இருக்கும். ஸ்மித், வார்னர் இருவரின் பேட்டிங் பார்ம் அனைத்து நாட்டு அணிகளாலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இருவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை இம்மாதக் கடைசியில் விலகுவதால், இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடக் கூடும் எனத் தெரிகிறது.

ஸ்டீவ் ஸ்மித் வருகைக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலம் பெற்றுள்ளது.இது நிச்சயம் அஸ்வின் தலைமையிலான அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதுதவிர பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமை. ஆனால், ஏப்ரல் 25-ம் தேதிக்குப் பின் இருவரும் உலகக்கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து சென்று விடுவார்கள். அதற்குள் முக்கிய லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி வென்றாக வேண்டும்.

பந்துவீச்சில் ஜெயதேவ் உனத்கத், வருண் ஆரோன், தவால் குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, பென் ஸ்டோக்ஸ் என பல்வேறு வகைகளில் பந்துவீசும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆதலால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகுந்த வலிமையுடன் தனது முதல் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில், கே.எல். ராகுல் ஆட்டத்தை பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்கள் தொடக்கத்தில் கொடுக்கும் அழுத்தம், அதிரடி அடுத்து வரும் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும். இவர்கள் தவிர கருண் நாயர், மயங்க் அகர்வால் டேவிட் மில்லர் ஆகிய சொல்லிக்கொள்ளும் வகையில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மற்றவகையில் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு வலிமையாக பஞ்சாப் அணி இல்லை.

அதே சமயம் பந்துவீச்சில் முகமது ஷமி, ஆன்ட்ரூ டை, அஸ்வின், முருகன் அஸ்வின், முஜிப்உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். ஆனால், வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னால் எந்த அளவுக்கு ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து