முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பிடிக்கும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்றத்தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றும் மத்தியில் அமைய உள்ள அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அகில இந்திய கைவினைஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்ட்ததில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கைவினைஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுப்பையனின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய கைவினைஞர்கள் மற்றும் விஸ்வகர்மா அமைப்பின் சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.

விஸ்வகர்மா சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் என்றும் அதைத் தொடர்ந்து அவருடைய ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விஸ்வகர்மா சமூதாயத்திற்கு உரிய மரியாதை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்த ஜெயலலிதாவின்அண்ணன் மகள் ஜெ. தீபாவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். பா.ஜ.க.வின் அடிமைகளாக அ.தி.மு.க. மாறி விட்டதாக தி.மு.க. குற்றம் சாட்டியிருப்பது குறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அப்படியானால் தி.மு.க, இத்தாலியிடம் அடிமையாகி விட்டதா என்று கேட்டார்.

இரட்டை இலையில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி தி.மு.க.வை தேர்தலில் ஆதரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தமிமுன் அன்சாரியை பொறுத்தவரை தனது இயக்கம் மேற்கொண்ட முடிவை செயல்படுத்துகிறார். தேர்தல் முடிந்ததும் பாருங்கள். முதல்வர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக அவர் செயல்பட மாட்டார். குக்கிராமங்களில் அ.தி.மு.க. கொடிக்கட்டி பறக்கிறது. கிராமப்புறங்களிலும் அ.தி.மு.க. பலமான இயக்கம். அ.தி.மு.க.வை தவிர பலம் வாய்ந்த இயக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பலம் வாய்ந்த இயக்கமாக மட்டுமல்ல, டெல்லியில் அமைச்சரவையில் இடம் பெறும் இயக்கமாகவும் மாறும். அப்போது அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் செயல்படுத்த முடியாத திட்டங்களை கூறியுள்ளனர். ஒரு கோடி பேருக்கு மக்கள் நலப் பணியாளர்களாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றாத கட்சி தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம். நாங்கள் ஆண்ட கட்சி, ஆளப் போகிற கட்சி. எனவே நிறைவேற்றக் கூடியவற்றைத் தான் தேர்தல் அறிக்கையாக நாங்கள் கொடுத்திருக்கிறோம். நீட்தேர்வு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அதை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி அரசு தான்.

பா.ஜ.க கூட்டணி சிறுபான்மைமக்களுக்கு எதிரானதுஅல்ல. பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதியானார். கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கியது பா.ஜ.க. அரசுதான். வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பது உறுதி. அதே போல் 18 இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து