முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பாங்காக் : ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் அரியணை ஏறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படி கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரது பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.

நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை அங்கு ஜனநாயக ஆட்சி மலரவே இல்லை.

இந்த சூழலில் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் உத்தரவு பிறப்பித்தன் பேரில், மார்ச் மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாய்லாந்து அரச குடும்பத்தினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது.

ஆனால் எதிர்பாராத வகையில் மன்னர் மகா வஜ்ரலோங்கோனின் சகோதரியும், இளவரசியுமான உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உப்லோரட்டனா மஹிடோல் தனது முடிவில் இருந்து பின் வாங்கினார்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 500 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு  தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பொதுவான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து