முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் குளோபல் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் தாஜ்மஹால்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23-வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியானது ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஆசியா ,ஐரோப்பிய, அரபு நாடுகள் என 78 நாடுகளின் கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே இடத்தில் எல்லா நாடுகளின் உணவு பழக்க வழக்கங்கள், புகழ்பெற்ற ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணிலடங்கா பொருட்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வாங்கவும் இயலும். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது. 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை தண்ணீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் படகில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து