முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைப்பு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர், இந்திய விமானப்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் நேற்று இணைக்கப்பட்டுள்ளன.    

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அவற்றில் முதல் கட்டமாக 4 சினூக் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்த இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து சண்டிகருக்கு கொண்டு வரப்பட்டன.  

இந்நிலையில் சண்டிகர் விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வரவான சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, இந்த ஹெலிகாப்டர்களை முறைப்படி விமானப்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் அதிக எடையுள்ள தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன்கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, மேம்படுத்தப்பட்ட சினூக் ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது தேசிய சொத்து” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து