முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது லீக் போட்டியில் டெல்லியுடன் இன்று மோதல்: ரிஷப் பந்த் மீது மட்டுமே எங்களது கவனம் இல்லை - சி.எஸ்.கே. பயிற்சியாளர் பிளெமிங்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : ரிஷப் பந்த் அதிரடிக்கு மதிப்பளிக்கும் நேரத்தில், அவர் மீது மட்டுமே எங்களது கவனம் இருக்காது என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

பாராட்டு...

ஐபிஎல் 2019 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 7 சிக்ஸ் அடங்கும். இவரது ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

டெல்லியுடன்...

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் சிஎஸ்கே அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பளிக்கிறோம்...

இந்நிலையில் ரிஷப் பந்த் ஆட்டத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர் மீது மட்டுமே கவனம் இருக்காது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தத் தொடரில் ஏராளமான வீரர்களுக்கு மதிப்பளிக்கிறோம். இதில் ரிஷப் பந்தும் ஒருவர். ஆனால் டெல்லி அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருக்கிறார்.

சொந்த பலம்...

டெல்லி அணியில் ஷிகர் தவான், கொலின் இங்கிராம், ஷ்ரேயாஸ் அய்யர் போன்றோரும் உள்ளனர். அவர்களின் தவறுகளை கண்டுபிடித்து, அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து