முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான 2-வது ஒருநாள்: ஆரோன் பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

சார்ஜா : பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

284 ரன்கள்...

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் பகல்- இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

209 ரன்கள்...

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.

8 விக்கெட்டில்...

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து