முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகாத உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பு: புதிய சட்டம் கொண்டு வந்தார் புரூனே மன்னர்

சனிக்கிழமை, 30 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர், தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டத்தை புரூனே நாட்டு மன்னர் கொண்டு வந்துள்ளார். இது வரும் 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புரூனேவில் ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் இந்த சட்டம் அங்கு மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நாட்டில் தகாத உறவும், ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர். தண்டனை கடுமையாகிற போதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார். இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்க தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள். இப்படி கடுமையான தண்டனை விதிக்கிற போது திருட்டை ஒழித்துக் கட்டி விடலாம் என்று அந்த நாட்டின் அரசு நம்புகிறது. இந்த தண்டனைகள் வரும் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட்டுள்ளது. புரூனே மத விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, இந்தப் பிரச்சினையில் மன்னர் தனது அறிவிப்பை 3-ம் தேதி வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து