முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் கைதான மாலத்தீவு முன்னாள் அதிபர் விடுதலை

சனிக்கிழமை, 30 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

மாலே, ஊழல் வழக்கில் கைதாகி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலின் போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்துல்லா யாமீன் வெளியே இருந்தால் இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதாடிய அரசுதரப்பு வழக்கறிஞரின் கோரிக்கைக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

அப்துல்லா யாமீன் 18-2-2019 அன்று கைது செய்யப்பட்டு, தலைநகர் மாலேவில் அருகேயுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி வீட்டுக்காவலில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  அவரை கைது செய்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இவ்விவகாரம் தொடர்பான வலுவான ஆதாரங்களை அரசுதரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால், உரிய காரணங்கள் இல்லாமல் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை காவலில் வைத்திருக்க முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி அவரை விடுதலை செய்வதாக நேற்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து