முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு சோதனையால் விண்ணில் சிதறிய 270 துகள்களை கண்காணிக்கிறோம்: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு சோதனையால், விண்ணில் சிதறி சுற்றிக் கொண்டிருக்கும் 270 துகள்களை அமெரிக்கா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோளை தகர்க்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. செயற்கைக்கோளின் சிதறிய பாகங்கள், விண் துகள்களாக தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை இன்னும் இரண்டு வாரத்தில் பூமியில் நுழைந்து எரிந்து சாம்பலாகி விடும் அல்லது சில துகள்கள் கடலில் விழும்.

இந்நிலையில், இந்தியாவின் இந்த சோதனையால் விண்ணில் சிதறிய 270 பாகங்கள், விண் துகள்களாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அது பூமியின் மேற்பரப்பிற்குள் நுழையும் வரை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து