முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து கணிப்புகளில் உண்மை இல்லை - கேரள முதல்வர் பினராய் கருத்து

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளா பாராளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்து கணிப்புகளில் உண்மை இல்லை என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார். 

மும்முனை போட்டி

கேரளாவில் வருகிற 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பாரதீய ஜனதாவும் 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 8 இடங்கள் கிடைத்தது.

வயநாட்டில் ராகுல்

இந்த தேர்தலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் மாநில காங்கிரசார் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். ராகுல்காந்தி போட்டியால் கேரளாவில் இம்முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

கருத்துக்கணிப்பு

காங்கிரசாரின் கருத்தை உறுதிப்படுத்துவதுபோல சமீபத்தில் அங்கு வெளியான கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 15-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறி இருந்தது. கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 4 இடங்களும், பாரதீய ஜனதா கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது.

உண்மை இல்லை

கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராய் விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகளில் எந்த உண்மையும் இல்லை. உண்மையான நாட்டு நடப்பை கருத்துக்கணிப்பு பிரதிபலிக்கவில்லை. காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஊடகங்கள் மீது கருத்தை திணிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கருத்துக்கணிப்பு முடிவுகள். அதை கம்யூனிஸ்டுகள் ஏற்க மாட்டார்கள்.கேரளாவில் நடைபெறும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 20 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து