முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் தொகுதியில் 792 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல்; அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் நேரலை வெப்கேமரா முறையில் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்பேசியதாவது:- ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,916 வாக்குச்சாவடி மையங்களும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி மட்டும் 302 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.  தேர்தல் வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களித்திட ஏதுவாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அந்த வகையில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 792 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நேரலை வெப்கேமரா மூலம் இணைய வழியில் கண்காணிக்கப்படவுள்ளது. 
இவற்றில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ள 140 வாக்குச்சாவடி மையங்களும் அடங்கும்.  இத்தகைய கண்காணிப்பின் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் நிகழும் நிகழ்வுகள் குறித்து இணைய வழியில் எளிதாக கண்காணித்திட முடியும். இருப்பினும் வெப்கேமரா முறை கண்காணிப்பு பணிகளின்போது இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள விதிமுறைகளை முறையே பின்பற்றுவது அவசியமாகும். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தின் உட்கட்டமைப்பும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதன்படி வெப்கேமரா பொருத்தும்போது வாக்காளரின் வாக்களிப்பு உரிமை அவசியத்தினை பாதுகாத்திடும் விதமாக அமைத்திட வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வெப்கேமரா இயக்குபவர்கள் உறுதி செய்திட வேண்டும்.  மேலும் இத்தகைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பொறுப்பாளர்கள்; உரிய விண்ணப்பத்தினை சமர்ப்பித்து தபால் வாக்குச்சீட்டு மூலம் தவறாமல் வாக்குப்பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில், தேசிய தகவல் மையம் அலுவலர் (பொ) பழனிவேல்ராஜா, உதவி மகளிர் திட்ட அலுவலர் விக்னேஷ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து