முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  இன்று தமிழகம் வரும் ராகுல்  காந்தி 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து