முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரத்தின் போது சேட்டை செய்தவருக்கு குஷ்பு விட்ட பளார்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. அருகில் இருந்தவர்களும், போலீஸாரும் உடனடியாக அந்த நபரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

இதனை டுவிட்டரில் ஒருவர், காங்கிரஸ் கட்சிக்காகப் பணிபுரிபவர்கள் மற்றும் தலைவர்களின் நிஜமுகம் என்று குஷ்புவை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலடியாக, நிஜமா? அப்படியென்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள், சில மோசமான ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது அமைதியாக பொறுத்துப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா? ஒரு பெண் உங்களைப் போன்ற ஒருவரை வளர்த்தெடுத்திருப்பது வெட்கக் கேடு. என் அம்மா எனக்கு தைரியமாக இருக்கக் கற்றுத் தந்திருக்கிறார். நான் அதைப் பின்பற்றுகிறேன். அகில இந்திய காங்கிரஸ் அப்படியான பெண்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் குஷ்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து