கடைசி பந்தில் அதிக முறை வெற்றி: முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      விளையாட்டு
Mumbai Win 2019 04 11

மும்பை : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசி பந்தில் வெற்றி பெற்றதன் மூலம், அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

197 ரன்கள்...

மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் வான்கடேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்து வெற்றியை ருசித்தது.

அதிக முறை...

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. நேற்றைய வெற்றியுடன் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து