முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி - மினி பஸ் மோதல் ஆந்திராவில் 7 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அனந்தபூர், ஆந்திர மாநிலத்தில் லாரியும், மினி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்த போது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. மினி பஸ்சின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து