முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்: பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

தேனி, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இன்று தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இப்பொதுக்கூட்டத்திற்காக ஆண்டிபட்டி - தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு பகுதியில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.     இப்பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் நரேந்திரமோடி, கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அமர்வதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஹெலிபேட்டின் ஸ்திரத் தன்மை குறித்து ஆராய ஹெலிகாப்டரை இறக்கி சோதனை செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் கூட்டம்

ஆண்டிபட்டிக்கு இன்று சுமார் 11 மணியளவில் பிரதமர் மோடி வருகிறார். சுமார் 40 நிமிடங்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார். மோடி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இக்கூட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.     பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் உயர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரதமர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் தேனியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து