முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரத்தில் கருத்து தெரிவித்த ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது

ரபேல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இதனை வரவேற்று அமேதியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல், ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது என குறிப்பிட்டார். புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்ததன் மூலம் பிரதமர் மோடி திருடன் என சுப்ரீம் கோர்ட்டும் கருதுகிறது எனும் பொருள்படும் வகையிலும் ராகுல் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் சொல்லாத ஒரு கருத்தை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாக திரித்து கூறிய ராகுல் காந்திக்கு எதிராக ரபேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பா.ஜ.க. தலைமை எச்சரித்திருந்தது. இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.மீனாட்சி லேக்கி, இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மூலம் தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து