முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் மேற்படிப்பு அருண் ஜெட்லி கேள்வி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராகுல்காந்தி மேற்படிப்பு குறித்து அருண் ஜெட்லி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி பதிவிட்டுள்ள கருத்தில், ராகுலின் கல்வி தகுதி குறித்து பதில் கிடைக்காத பல கேள்விகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. வேட்பாளரின் கல்வித் தகுதியில் கவனம் செலுத்துபவர்கள், ராகுலின் கல்வித் தகுதி பற்றி கேட்கப்படும் கேள்விகளை கண்டு கொள்வதில்லை. அதற்கே அவர்கள் நிறைய பதிலளிக்க வேண்டும். அது அனைத்திற்கும் மேல் ராகுல் பட்டமேற்படிப்பு படிக்காமலேயே எம்.பில். பட்டம் பெற்றுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கடிதங்கள், கையெழுத்து இயக்கங்கள் எல்லாம் காங்கிரசால் நடத்தப்படுபவை. மோடியின் செல்வாக்கை எதிர்க் கட்சிகளால் ஏற்க முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் பணிகள் எதையும் துவக்காத எதிர்க்கட்சிகள் இப்போது ரபேல் அல்லது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என தவறான தகவல்களை கூறி வருகின்றன என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து