ஐ.பி.எல். 27-வது லீக் ஆட்டம்: மும்பையை ராஜஸ்தான் 4 விக்கெட்டுகள் - வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      விளையாட்டு
Rajastn Win 2019 04 13

மும்பை : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ரோகித் - டி காக்...

மும்பையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் 81 (52) ரன்கள், ரோகித் சர்மா 47 (32) ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 (11) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட், தவால் குல்கர்னி மற்றும் ஜெய்தேவ் உனட்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஜோஸ் பட்லர்...

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (188 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ராஜஸ்தான் அணியில், அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 89 (43) ரன்கள் விளாசினார். ரஹானே 37 (21) ரன்கள், சஞ்சு சாம்சன் 31 (26) ரன்கள் எடுத்தனர்.  மும்பை அணியில் கிருணல் பாண்டியா 3 விக்கெட், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட், ராகுல் சாஹார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து